சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் திரு. V.S.ஹரி, திரு. V.D.மூர்த்தி, திரு. விஸ்வநாதன் (வழக்கறிஞர்), திரு. ஸ்ரீதர் ராவ், திரு. திலீபன் (டாக்டர்), திரு. வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் “ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்” கட்டியுள்ளனர்.
இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமர்சையாக நடந்தியுள்ளனர்.
விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவுள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.