152 total views, 1 views today
இயக்குநர், எழுத்தாளர், இப்போது பிஸியான நடிகருமான ஈ ராமதாஸ் – திலகவதி தம்பதிகளின் மகன் ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம் நேற்று புதன்கிழமை மாலை நடந்தது.
மணமகன் ராம பாண்டியன் ஆஸ்திரேலியாவில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மணமகள் ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி ஆவார்.
சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன், அவரது மனைவி திருமதி செல்வி தியாகராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, கேஎஸ் ரவிக்குமார், சித்ரா லட்சுமணன், கே ரங்கராஜ், மனோபாலா, பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரேஷ் காமாட்சி, சி ரங்கநாதன், நடிகர்கள் எஸ்வி சேகர், வழக்கு எண் முத்துராமன், மயில்சாமி, வையாபுரி, வெங்கட் சுபா உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.
ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமணம் வரும் பிப்ரவரி 6, 2019-ல் சென்னையில் விமரிசையாக நடக்கவிருக்கிறது.