1,339 total views, 1 views today
அன்புள்ள ஊடக நண்பர்களே,
சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை.அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்.”
நன்றி