இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படம்

0

 490 total views,  1 views today

மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது.

இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும்  மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார்.

“அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்களும் புதுமையாக உணர்வார்கள். முன்னணி நடிகையாக வர அத்தனை தகுதிகளும் மேகா ஆகாஷுக்கு இருக்கிறது. மேகா ஆகாஷின் பிரபலத்தன்மை  இளைஞர்களிடம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அவரை எங்கள் படத்தில் நாயகியாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் இயக்குனர் கண்ணன்.

Share.

Comments are closed.