இயக்குனர் கவுதம் மேனன் கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடித்த ‘கோலி சோடா 2’

0

Loading

சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு ‘படம் தான் கோலி சோடா’. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ‘கோலி சோடா 2’ படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், ‘கோலி சோடா’ முதல் பாகத்தின் சாராம்சம் இப்படத்தில் நிச்சயம் இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார்.

தற்பொழுது, ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Post Production பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘கோலி சோடா 2’ இடம்பிடித்துள்ளது.

இப்படம் குறித்து அதன் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், ” நாங்கள் திட்டமிட்டபடியே ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, சிறப்பாக  முடித்துள்ளோம். மிகப்பெரிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்த  எனது அணியினருக்கும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ‘கோலி சோடா’ மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்  எனது உழைப்புக்கு மேலும் மதிப்பை கூடியுள்ளது. எங்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் ‘கோலி சோடா’ போல் ‘கோலி சோடா 2’ படத்தையும் சிறப்பாக்கி வெற்றி பெறவைக்கும் என நம்புகிறேன் ”.

‘கோலி சோடா 2’ படத்தை ‘Rough Note’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஷ், பரத் சீனி, வினோத், ஐசக் பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா , ரோகினி , ரேகா , சரவணா சுப்பையா ,  மற்றும் ஸ்டண்ட் ஷிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Share.

Comments are closed.