815 total views, 1 views today
“களவாணி” படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண.விழாவில் இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.