இரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..!

0

Loading

 

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.முருகவேல் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்க்கா தகராறு.’

இந்த படத்தில் பிரபல நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார். நாயகிகளாக வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் நடித்துள்ளனர்.

மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, மனோபாலா,  போண்டாமணி, கராத்தே ராஜா, சுரேகா, ரேவதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்..

கலை இயக்கம் – ஜான் கென்னடி, ஒளிப்பதிவு – முத்துராஜ், இசை – தேவா, பாடல்கள் – கவிமணி, பி.முகவேல், சாரதா, கோனேஸ்வரன், சுரேஷ் கே.வெங்கிடி, நடனம் – அசோக்ராஜா, சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி, குபேரன், படத் தொகுப்பு – காளிதாஸ், தயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம், கதை, வசனம், தயாரிப்பு  – P.முருகவேல். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் கே.வெங்கிடி.

இவர் மலையாளத்தில் இயக்குநர்கள் கே.மது, சுதி சங்கர் ஆகியோரிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கே.வெங்கிடி பேசும்போது, “என்று தணியும்’ என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் ‘யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை’ படத்தில் நடித்த விஜய்ராஜ் இருவரையும் வைத்து எனது முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு ஆணின் சூழ்நிலை காரணமாக அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் பிள்ளைகள். பொதுவாக சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அந்த மனைவிகள் இருவரும், அதிசயமாக ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களைப் போலவே ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மட்டும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.  இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா.. இல்லையா… என்பதுதான் கதை.

படப்பிடிப்பு ஆந்திரா, ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை, திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம்.  கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. இசையில் தூள் கிளப்பி இருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர்.

Share.

Comments are closed.