825 total views, 2 views today
அருள்நிதி – மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் – ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. ஒரே இரவில் நடைபெறும் சம்பவத்தை மையமாக கொண்டு நகரும் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க, ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கிறார். அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை, இன்று (30.01.2017) ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ வளாகத்தில் நடைபெற்றது.
எளிமையாக நடைபெற்ற இந்த பட பூஜையில், இதே நிறுவனத்துக்காக தற்போது படங்கள் இயக்கி வரும் இயக்குநர்கள் ‘முண்டாசுப்பட்டி’ ராம், சரவண் (மரகத நாணயம்) மற்றும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் குழுவினரான இயக்குநர் மு மாறன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் டோரதி ஜெய் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு நாளை (31.03.2017) முதல் துவங்குகின்றது.