இளவரசி பட்டம் பெற்ற ஹன்சிகா

0

 218 total views,  1 views today

தமிழ் திரை உலகின் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று வீற்று இருக்கும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும்  புதிய படத்தின் தலைப்பு அறிவிக்க பட்டு உள்ளது.  “மஹா”என்று தலைப்பிடப் பட்டு இருக்கும் இந்த படம் ஒரு crime திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதியழகன் மேலும் கூறியதாவது ” ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேயே நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும் , ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை  மனதில் வைத்து , அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார். இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு  பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார் .ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ் திரை ரசிகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன். “மஹா”திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.
 

 

Share.

Comments are closed.