உச்சத்துக்கு கொண்டு போகும் “பண்டிகை” – கிருஷ்ணா நம்பிக்கை

0

 861 total views,  1 views today

2X1A1210(1)
தமிழ் திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்கள் இடையே நிதானமாக, ஆனால் நிச்சயமாக முன்னேற்ற பாதையில்  செல்பவர் நடிகர் கிருஷ்ணா.இவரது நடிப்பில், அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கின்ற “பண்டிகை” இவரை இன்னமும் உச்சத்துக்கு கொண்டு போகும் என கணிக்கிறது திரை உலக வட்டாரம் .
” கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாக தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம் அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதை சொல்லும். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்த கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியும்.அன்பு- அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிக பெரிய action ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம்.
இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்து உள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்பது தெரியும்.”பண்டிகை” மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும்.சித்தப்பு சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குண சித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்பார் என்பது உறுதி. அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை இந்தப் படம் மூலம் நிச்சயம் நிர்ணயித்துக் கொள்வார்.இசை  அமைப்பாளர் R H விக்ரம் பாடல்களில் மட்டுமின்றி, பிண்ணனி இசையிலும் தனது திறமையை வெளி காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்தும் , பட தொகுப்பாளர் பிரபகாரும் படத்தின் உச்க் கட்ட வேகத்துக்கு
உறு துணையாக இருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் தாண்டி அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட சிரத்தை , அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. படத்தை வாங்கி வெளி இடும் auraa சினிமாஸ் மகேஷ் கோவிந்த ராஜுக்கு தோட்டக்தெல்லாம் பொன்னாக்கும் ராசி இருக்கிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ” பண்டிகை” படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப் படும் என்பது நிச்சயம்” என்று கொண்டாட்டமாக கூறுகிறார் கிருஷ்ணா.

 

Share.

Comments are closed.