யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில், காதல் கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘யாக்கை’, வருகின்ற உழவர் திருநாளன்று வெளியாக இருக்கின்றது. ‘பிரிம் பிச்சர்ஸ்’ சார்பில் முத்துக்குமரன் தயாரித்து, குழந்தை வேலப்பன் இயக்கி இருக்கும் ‘யாக்கை’ திரைப்படத்தில் கிருஷ்ணா – சுவாதி ரெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“நம்முடைய விவசாயத்தையும், அதற்கு மூல காரணமாக இருக்கும் விவசாயிகளையும் கௌரவிக்கும் திருநாள் – பொங்கல்….அப்படிப்பட்ட உன்னதமான நாளில் எங்கள் யாக்கை திரைப்படத்தை வெளியிடுவதில், நாங்கள் பெருமை கொள்கிறோம்…. அதுமட்டுமின்றி முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் ‘பிரிம் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு இது சிறப்பும் கூட…..ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான யாக்கை பட பாடல்கள் அனைவரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற, எங்களின் யாக்கை படமும் ரசிகர்களின் உள்ளம் கவரும் திரைப்படமாக இருக்கும்…..பொங்கல் திருநாளும் – யாக்கை திரைப்படமும் ஒன்றாக இணைந்து ரசிகர்களின் மகிழ்ச்சியை மென்மேலும் அதிகரிக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பிரிம் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் முத்துக்குமரன்.