எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கும் ஆர்.கே.நகர்

0

Loading

வர்த்தகமும் வித்தகமும் ஒன்றிணைந்த அமைதிப்படை படம்தான் அரசியல் நையாண்டிப் படங்கள் என்றால் நம் நினைவில் வரும் முதல் படம். பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை விரைவில் வெளிவர இருக்கும் ஆர்.கே.நகர் திரைப்படம் முறியடிக்குமா என்ற கேள்வி தமிழ் திரையுலகினரிடையே எழுந்திருக்கிறது.

அரசியல் நையாண்டிப் படங்கள் என்றால் நம் நினைவில் வருவதுசோ எழுதி இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்த முகமது பின் துக்ளக்காக இருந்தாலும், வணிக ரீதியில் பெரும் வெற்றிப் படமாக அமையாததால் நம் நினைவு அடுக்குகளில் புதையுண்டு பின் தள்ளப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இடைத்தேர்தல் ஆர்.கே.நகர்.  எனவே தலைப்புக்கே ரசிகர்கள் அமோகவரவேற்பு  கொடுத்தனர்.  தொடர்ந்து வெளியான டீஸர், ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிக்கும் அபரிதமான ரசிகர்கள் வரவேற்பு தொடர்ந்தது.

போட்டி போட்டு நடித்திருக்கும் வைபவ் மற்றும் சம்பத் ஆகியோருக்கு ஈடுகொடுத்து சக கலைஞர்களான சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் டி. சிவா ஆகியோரும் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பிரதான பெண் பாத்திரங்களில் தோன்றும் சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி இருவரும் அழகுப் பதுமைகளாக மட்டும் வந்து செல்லாமல் முத்திரை பதிக்கும் வண்ணம் தங்கள் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கிறார். கல்யாண் நடனம் அமைத்திருக்கிறார்.

தணிக்கையில் ‘U/A’ சான்றிதழை பெற்று வெளியீட்டுக்குத் தயாராகிவரும் ஆர்.கே.நகர் படத்தை பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் வி.ராஜலட்சுமி உடன் இணைந்து ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்திருக்கிறார்.

கங்கை அமரன், பொன்ராஜ் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்க கல்யாண் நடனக் காட்சிகளுக்ப் பொறுப்பேற்கிறார்.

நகைச்சுவை மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்தான் படத்தின் பெரும் பலம் என்கிறார் இயக்குநர் சரவணராஜன்.

Share.

Comments are closed.