எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றினார்கள்?

0

 931 total views,  1 views today

DSC_4598(1)

ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு நான் யாரென்று நீ சொல் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

எடிட்டிங் : பிரேம்

பாடல்கள் : இளையகம்பன்

ஸ்டண்ட் : பம்மல் ரவி

இசை : ஜான் பீட்டர்

ஒளிப்பதிவு : பாஸ்கர்

நடனம் : ரவிதேவ்

தயாரிப்பு : R.மணிமேகலை

எழுதி இயக்கி இருப்பவர் – A.M.பாஸ்கர்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன்.நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷயங்களை பேச மாட்டேன்.ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது..நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு.ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக் கும் வரி 30% க்கு 28% ஜி.எஸ்.டி என தனி வரி என மொத்தம் 65 % வரியாக போனால் எப்படி சினிமா வாழும்.. வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்.ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கிறார்கள்.. மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும்.எம்ஜியார் நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும்.கலைஞர் கொண்டு வந்த அந்த வரிச்சலுகையை புரட்சித் தலைவியும் கடை பிடித்தார்.கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

Share.

Comments are closed.