799 total views, 1 views today
எம்.ஜு.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம் ஜி ஆரின் பட திறப்பு விழாவும் எம் ஜி ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது திரு பழனி ஜி பெரியசாமி தலைமையில் எம் ஜி ஆரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது மேலும் இவ்விழாவில் எம் ஜி ஆர் உடன் நெருங்கி பழகியவர்களும் அவரோடு பணியாற்றிய முன்னாள் அரசு செயலாளர்களும் எம் ஜி ஆர் உடன் பழகிய இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்டனர் இவ் விழாவில் கவிஞர் வைரமுத்து,முன்னாள் அமைச்சர் ஹண்டே,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,வி,ஐ,டி பல்கலைக்கழக தாளாளர் விஸ்வநாதன் , எம் ஜி ஆரின் அண்ணன் மகள் லீலாவதி,நடிகர் சத்யராஜ் , முன்னாள் அரசு செயலாளர்கள் பிச்சாண்டி இ ஆ ப,சம்பத் இ ஆ ப, மற்றும் திரு ஐசரி கனேசன் , தங்கர் பச்சன், தேவனாதன், விஜயகுமார்,எஸ் பி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்