எஸ் focus நிறுவனம் விநியோகிக்கும் பாதையில் “வண்டி”.

0

Loading

தமிழ் திரை உலகில் அவ்வப்போது சில அற்புதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கதை அம்சமுள்ள படங்கள் சமீபமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த படங்களின் வரிசையில் அடுத்து வர இருக்கும் படம் தான் “வண்டி”.விதார்த் நடிப்பில், ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிப்பில், புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்கும் இந்தப் படத்தின் தமிழ் நாடு திரை அரங்கு உரிமையை பெற்று இருப்பவர் எஸ் focuss நிறுவனத்தின் நிறுவனர் , பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம் சரவணன். 
சென்னை 28 பாகம் 2, பவர் பாண்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்-பார்த்திபன் நடிப்பில் உருவான “குப்பத்து ராஜா” வெகு விரைவில் வெளி வர உள்ளது. 
“என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களை   தொடர்ந்து வெளி இடுவதுதான்.  “வண்டி”  படத்தின் விநியோக உரிமையை பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன். ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக promotions மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. அந்த வகையில் சிறந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு,  எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட “வண்டி” வெற்றி பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்கிறார் எம் சரவணன்.
 
 

 

Share.

Comments are closed.