” ‘நாசா’ வுக்கு எப்படி ஒரே ஒரு ‘வாயேஜர்’ விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் ” எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா. இது குறித்து அவர் பேசுகையில் , ”என்னை போன்ற கோடான கோடி தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி சாரின் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனை ‘வாயேஜர்’ விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிக பெரியது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் இவ்வளவு ஆண்டுகளாக கடந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் ரஜினி சாரை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் , ‘வாயேஜர்’ விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும் ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும். ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் ”