‘ஹாப்பி நியூ இயர்’ – குறும்படம்

0

Loading

சினிமா துறையில் காலெடுத்து வைக்க உதவும் பல பாதைகளில் குறும்படங்கள் ஒன்று. நடிகர்கள்  விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மற்றும் பாலாஜி மோகன் போன்ற நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தது குறும்படங்களே.இது போன்ற ஒரு வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் தான்  ‘ஹாப்பி நியூ இயர்’. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜித் , ‘ஹாப்பி நியூ இயர்’ குறும்படத்தை இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இது குறித்து விஜித் பேசுகையில், ” சமீபத்தில் எங்களது ‘ஹாப்பி நியூ இயர்’ குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு போட்டு காண்பித்தோம். படத்தை முழுவதும் பார்த்த அவர் படத்தை பாராட்டி எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் . படத்தின் பிண்ணனி இசை பிரமாதமாக இருந்ததாகவும், படத்தொகுப்பு கச்சிதமாக இருந்ததாகவும், படத்தில் எனது தோற்றம் அருமையாக இருந்ததாகவும் அவர் பாராட்டினார். இப்படத்திற்காக பல நாட்கள் அசுர உழைப்பு உழைத்த நானும் எனது அணியும் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை விரைவில் அடைய முனைப்போடு உள்ளோம்.”
 
Share.

Comments are closed.