ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும் -விஷால்

0

 828 total views,  1 views today

 IMG_0109

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாகC.செல்வகுமார் தயாரிக்கும் படம் ஒரு கனவு போல “                                             இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.

 விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று  மாலை நடைபெற்றது                                                 முதல் முறையாக படத்தின் பாடல்களை பென்டிரைவில் வெளிட்டுள்ளனர். விழாவில்     நடிகர் சார்லி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக்  இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி,   எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம் , கார்த்திக் சுப்புராஜ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்ஸி சண்முகம், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர்  சுகுமார் மற்றும் ஒரு கனவு போல படக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 

விழாவில் பேசிய நடிகர் விஷால் நான் இப்போது நடிகனாகவோ நடிகர் சங்க செயலாளராகவோ பேசவில்லை .ஒரு மனிதனாக பேசுகிறேன். காப்பாற்ற வேண்டிய விவசாயிகள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விவசாயியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி மற்றும் அனைத்து சங்கங்களும்  இறங்க இருக்கிறோம் .அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அது சம்மந்தமாக இப்போதுதான் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.

நான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன். இந்த விழாவிற்கு தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்து கொள்ள வரவில்லை என்று நிச்சயமா கலாட்டா செய்வார்கள்..அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்து கொல்லனும்.

சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான் ஆனால் ஒரு கனவு போல மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்.

 விழாவில் கலந்து கொண்டதற்கு விஷாலுக்கு கிப்ட் தருவதாக சௌந்தர்ராஜா கூறினார் எனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.   அதனால் படத்தின் தயாரிப்பாளர் சி.செல்வகுமாரும்  நடிகர் சவுந்தர்ராஜாவும்,  நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக எடுக்கும் முயற்சிக்கு  உதவ  முதல் நன்கொடையாக நாங்கள் இதை தருகிறோம் என்று  25000 ரூபாயை நன்கொடையாக கொடுத்தனர்.

 

Share.

Comments are closed.