கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி

0

 868 total views,  1 views today

RAV_0454

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “  கடைசி பெஞ்ச் கார்த்தி “

இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –  முஜிர் மாலிக் /  இசை    –  அன்பு ராஜேஷ்

பாடல்கள்   –   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர்

எடிட்டிங்   –  என்.ஹெச் பாபு /  ஸ்டன்ட்   –  ட்ராகன் பிரகாஷ்

நடனம்   –  ரமணா, திலீப்  /  நிர்வாகத் தயாரிப்பு    –  கிரண் தனமலா

தயாரிப்பு மேற்பார்வை   –   நயீம்

தயாரிப்பு   –  சுதிர் புதோடா

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  –  ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர்,  திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.

கடைசி பெஞ்ச் கார்த்தி இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இசைத் தட்டை வெளியிட  இசையமைப்பாளர் மரகதமணி பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகை அனுஷ்கா, தயாரிப்பாளர் ஜான்சுதிர், இயக்குனர் ரவி பார்கவன் மற்றும் லைன் புரடியூசர் நயீம் ஆகியோர் பங்கேற்றனர்.

Share.

Comments are closed.