”கட்டம்” – முற்றிலும் புது வகையான சினிமா

0

 811 total views,  1 views today

‘நெடுஞ்சாலை’ , ‘ ‘அதே கண்கள் ‘ போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்யாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நுணுக்கத்தை நன்கு அறிந்திருக்கும் இவரது அடுத்த படம் ”கட்டம்”. முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ள படம் ‘கட்டம்’. இப்படத்தை ‘icreatewonderfilms’ சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் , ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஷிவதா பேசுகையில்,” கட்டம் ஒரு ‘கர்மிக் திரில்லர்’.இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் விதியெனும் ‘கர்மா’ வால் பழிவாங்கப்படுவதே ‘கர்மிக் திரில்லர்’. இதுவே ‘கட்டம்’ படத்தின் சாராம்சம்.’கட்டம்’ மின் கதையை  இயக்குனர் ராஜன் மாதவ் என்னிடம் முழுவதும் சொன்னபொழுது , அது என்னை பெரியளவில் கவர்ந்தது. நான் அதில் நடிக்க உடனே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு அது ஒரு புத்தம் புது கதை களமாகவும் ,ஒரு புது வகை சினிமாகவும் இருந்தது. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களை அவ்வளவு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வடிவமைத்துள்ளார் இயக்குனர். படப்பிடிப்பின் பொழுது, எங்களது நடிப்பை மெருகேற்ற, இயக்குனர் எனக்கும் மற்ற சக நடிகர்களுக்கும் கொடுத்த சுதந்திரம் மிக முக்கிய பங்கு வகித்தது. கட்டத்தில் எனது கதாபாத்திரத்திற்கு பல பரிமாணங்கள் உள்ளன. எனக்கு அது அருமையான சவாலாகவும் , பெரும் தீனியாகவும் இருந்தது. இந்த கதாபாத்திரம் செய்ததின் மூலம் நடிப்பில் நான் மேலும் நிறைய கற்றுக்கொண்டேன் என்று தான் கூற வேண்டும்.
எங்களது இந்த ‘கர்மிக் திரில்லர்’ [கட்டம்] போன்ற ஒரு முற்றிலும் புது வகையான சினிமாவை தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள் என உறுதியாக சொல்ல முடியும். இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இப்படத்தின் கதையும், திரைக்கதை பின்னப்பட்டுள்ள விதமும் , எதிர்பாராத அதிரடி திருப்பங்களும் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே வைத்திருக்கும். எங்களது ‘கட்டம் ‘ அணி ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து உழைத்தது. இந்த சவாலான கதையை திறம்பட கொண்டுவர எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும்  கடுமையாக உழைத்தனர். என்னுடன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களது உழைப்பும் நடிப்பும் பேசப்படும். நான் பெரிதும் எதிர்பாக்கும்  ‘கட்டம்’ எனது சினிமா வாழ்வில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும்.”
Share.

Comments are closed.