‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

0

Loading

தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு சென்று  ஜொலித்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இந்த வரிசையில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் நடிக்கும்  முதல் படமாகும். இந்த படத்தின் இயக்குனர்  தேசிங் பெரியசாமி. இந்த கதை கதையின் தயாரிப்பாளர்  பிரான்சிஸ் கண்ணூக்கடன்.
தனது முதல் பட வாய்ப்பு குறித்து ரக்க்ஷன் பேசுகையில் , ” நடிப்பில் சாதிக்கவேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த வேலையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச்சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மிக பெரிய நட்சத்திரமாகவும் ஒரு ஸ்டாரின் மகனாகவும் இருந்தாலும் துளிகூட பந்தாவே இல்லாமல் மிக எளிமையாக பழக்கூடியவர் துல்கர் சல்மான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என நம்புகிறேன் ”.
Share.

Comments are closed.