கபாலி செல்வா ஆன நடிகர் செல்வா.

0

Loading

ZF1A7343
நடிகர்  செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடைய தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப் படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதா நாயகனாக நடித்து உள்ள இவர் கோல்மால் என்கிற வெற்றி படத்தை இயக்கியும் உள்ளார்.
நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், ” 12 .12. 1950″. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்த நாளை குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்கிறார் செல்வா. நேற்று நடிகர் சிவகார்திகேயனால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த படத்தின் motion போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா  தரப்பு  ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்ப்பு பெற்றது.
“இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும்  ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை . அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும். 12 12 1950 அந்த  மாமனிதனுடன் , அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வு பூர்வமான கதை .அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளி வரும் நாள்  ஒரு ரசிகனுக்கு பண்டிகை  போல. அத்தகைய ஒரு நாளில் அந்த  படத்தை பார்க்க முடியாத சூழ் நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி  எதிர்கொள்கிறான் என்பதை நகை சுவை கலந்து உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறோம். ரஜினி சாருடைய தீவிர ரசிகனாக நான்  நடிக்க  தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடிக்க இளம் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு ஸ்ரீ ஒளி பதிவில், ஜ்யோஸ்டார் entertainment என்கிற பட நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வர ராஜு  தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. Post production பணிகள்  முழு வீச்சில் நடை பெறுகிறது. இந்த படம் 72% காமடி, 28 % GST ( Ganster, comedy and Thriller) என்று கூறினார் செல்வா.
Share.

Comments are closed.