கபிலன் வைரமுத்துவின் “இளைஞர்கள் என்னும் நாம்”

0

Loading

Print

சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது – எப்படி வளர்ந்தது – ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் என்னும் நாம். இளைஞர்களின் அரசியல் முன்னெடுப்பு குறித்தும் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது.இதன் முன்னோட்டத்தை கடந்த செப்டம்பர் 14 அன்று இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். செப்டம்பர் 25 திங்கள்கிழமையன்று இயக்குநர் முருகதாஸ் இந்த ஆவணப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கியவரான கார்த்திகேயன் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டு வெளியான ‘கவண்’ மற்றும் ‘விவேகம்’ படங்களின் கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களிலும் பங்களித்திருக்கும் கபிலன்வைரமுத்து “இளைஞர்கள் என்னும் நாம்” என்ற தன் ஆவணப்படம் பற்றி கூறியிருப்பதாவது:

“தமிழ்ச்சமூகம் மிக முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் அடியெடுத்து வைப்பதை அனைவருமே உணர்கிறோம். மூத்த தலைமுறை பெருமைகொள்ளும் வண்ணம் சமூகத்தை வழிநடத்தக் கூடிய வல்லமை இளைய தலைமுறைக்கு உண்டு.கருத்துக்களோடு நில்லாமல் களத்தில் இறங்கி செயல்படும் இயக்கங்கள் இங்கே ஏராளம். “இளைஞர்கள் என்னும் நாம்” என்ற இந்த ஆவணப்படத்தில் நாங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் சிறு அனுபவம் எம் சகோதர சகோதரிகளுக்கு பயன் தருமென நம்புகிறோம்.16 வயதில் தொடங்கிய இந்த முயற்சிகளில் சில அபத்தங்கள் இருக்கலாம், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருக்கலாம். ஆனால் சமூக மாற்றத்திற்காக நிகழ்ந்த நேர்மையான முயற்சிகளில் இதுவும் ஒன்று.நாங்கள் இதை பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்களை விட பன்மடங்கு சிறப்பாக இயங்கிய இயங்கும் இளைஞர் இயக்கங்கள் அவர்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முன் வருவர். இது மாற்று அரசியலுக்கான கனவுகளை ஒருங்கிணைக்க உதவும்.ஆரோக்கியமான செயல்களுக்கு வழிவகுக்கும்.திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் மீது விழும் அரசியல் வெளிச்சம் – தரையில் நிற்கும் இளைஞர்களின் மீதும் விழும்”

இளைஞர்கள் என்னும் நாம் – FULL VIDEO – OFFICIAL LINK:

https://youtu.be/9MHmIJMRnBk

Share.

Comments are closed.