2017 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இளம் இயக்குனர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். துருவங்கள் 16, மாநகரம், எட்டு தோட்டாக்கள், ரங்கூன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் என தொடர்ந்து புதிய இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது.அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது “முரண்” திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கும், Icreatewonder என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் “கட்டம்” ஆகும். புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா நாயர். நவீன்- ஜே சி பால் இரட்டையர் இசை அமைக்க , டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் , சந்தியா ஜனா தயாரிக்கிறார்.
“கிரைம் த்ரில்லர் தமிழ் திரை உலகுக்கு புதியது அல்ல. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் ” கர்மிக் திரில்லர்” யுத்தி மிகவும் புதிது. வினை விதைத்துவன் வினை அருப்பான் என்பது பழ மொழி, அதற்கு துணை நின்றவனும் வினை அருப்பான்” என்பதே
“கட்டம்” படத்தின் மைய கருத்து. ரசிகர்களுக்கு நாங்கள் படத்தை கையாண்டு இருக்கும் விதம் நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு கட்டம் முடிந்து, இறுதி கட்ட போஸ்ட் productions பணி நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. திரைக்கு வரும் கட்டத்தை நெருங்கி விட்டோம்” எனக் கூறினார் இயக்குனர் ராஜன் மாதவ்.