மழை மேகங்களுக்கு மேலே பறக்க கூடிய ஒரே பறவை இனம் ‘கழுகு’. மனிதனின் கண் பார்வையை விட ஐந்து மடங்கு அதிகமான கூர்மையான பார்வையை உடையது ‘கழுகு’. அந்த கூர்மையான பார்வையை கொண்டு சமூதாயத்தில் நடைபெறுகின்ற குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பதை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், ‘பென்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘கழுகு பார்வை’ குறும்படம்.
‘நாம் என்ன காரியம் செய்தாலும், நம்மை யாரோ கண்காணித்து கொண்டே இருப்பார்கள் என்பதை மறந்து விட கூடாது…’ என்பது தான் இந்த ‘கழுகு பார்வை’ குறும்படத்தின் ஒரு வரி கதை. பள்ளி மாணவன் ஒருவன் பணத்திற்காக சில கும்பல்களால் கடத்தப்படுகிறான்…. எப்படியாவது அவன் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டுகின்றது அந்த கும்பல்…. ஆனால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களை சுற்றி வளைக்க திட்டம் தீட்டப்படுகிறது… அது யார் ? என்ன திட்டம் ? என்பது தான் ‘கழுகு பார்வை’….