“காதலை தேடி நித்யா-நந்தா”

0

 164 total views,  1 views today

குறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதில் பண்டிதர்கள் என கூறலாம். “திரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்துக்கு “காதலை தேடி நித்யா-நந்தா”  என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த தலைப்பு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
” இந்த படத்தின் நாயகன் நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் “காதலை தேடி நித்யா நந்தா” . வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம் , விரைவில் தொடர் அறிவிப்புகள் படத்தை பற்றி வரும்.ரசிகர்களுக்கு ஒரு உத்திரவாதம்,இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில்,லால்குடி இளையராஜா கலை அமைப்பில். ஜி வி பிரகாஷ் கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகள் மேற்கொண்டு உள்ளார்.
 
 
 
Share.

Comments are closed.