காதல் சண்டையும், கபடி சண்டையும் தான் “ அருவா சண்ட “ – இயக்குனர் ஆதிராஜன்

0

 306 total views,  1 views today

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “ அருவா சண்ட “ படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடை பெறுகிறது.அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் அவர்களிடம் பட பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது..                                               

சுருக்கமாகச்  சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன.இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கி எடுக்கும்.                                                                                  

அதே போல வீரத்தமிழனின் தேசிய அடையாளம் கபடி. பட்டித்தொட்டியில் மட்டுமல்ல சிட்டியிலும் இளைஞர்களின் விருப்பமான வீர விளையாட்டாக இருந்து வருகிறது. ஐ.பி.எல் கிரிகெட்டை போல, இன்று நாடு முழுவதும் பிரபலமாகி வரும் “ புரோகபடி “  ( PRO- KABADI )தேசிய அளவில் கபடி வீரர்களால் பணத்தையும், புகழையும், அங்கீகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் “ அருவாசண்ட “ படம் அமைந்திருக்கிறது.

சரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்றிராத வேடத்தில் உருக்கமாக நடித்திருக்கிறார். காட்சியமைப்பும், வசனங்களும் உயிர்ப்புடன், உணர்ச்சிப்பூர்வமாக இருக்கின்றன என்று சரண்யா பொன்வண்ணன் படப்பிடிப்பின்போது பாராட்டினார். முக்கிய வேடத்தில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், மதுரை சுஜாதா ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருகிறார்கள். பக்கா கமர்ஷியல் படமாக இருவாகி வருகிறது “ அருவா சண்ட “ என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

கபடி வீரர் ராஜா நாயகனாக நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குனர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவி சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

தரண் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ஒலிப்பதிவு ; சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு ;  வி.ஜே.சாபு ஜோசப், கலை ; சுரேஷ் கல்லேரி, ஸ்டன்ட் ; தளபதி தினேஷ், நடனம் ; சிவசங்கர், தீனா, ராதிகா, தயாரிப்பு நிர்வாகம் : கே.வீரமணி.

படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகள், மதுரை, பொள்ளாச்சி, சேலம், கேரளா பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.   

Share.

Comments are closed.