கிரிக்கெட் ஆட்டத்தில் ‘யூ – டர்ன்’ எடுத்துள்ளனர் ‘சென்னை 28 – II’ அணியினர்

0

Loading

84d2850b-bc0b-465f-bf87-a3c5077a47e3 95b768fd-3bd4-4839-abf3-1c80588d17ab

ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, ‘யூ’ சான்றிதழ் தான். அந்த வகையில், தங்களின் ‘சென்னை 28 – II’ படத்திற்காக ‘யூ’ சான்றிதழை தணிக்கை குழுவிடம் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய அணியினரும் பெற்று இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

“எங்கள் சென்னை 28 – II திரைப்படம் வெற்றிகரமாக யூ சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த அணியினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. நட்பையும், கிரிக்கெட்டையும் ஒன்றிணைத்து நாங்கள் அடித்த சிக்ஸர் தான் இந்த ‘யூ’ சான்றிதழ்….’வெற்றி’ என்னும் கோப்பையை விரைவில் எங்களின் தொடர் சிக்ஸர் மழையால் நாங்கள் கைப்பற்றுவோம்….” என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

Share.

Comments are closed.