கிருஷ்ணா நடித்திருக்கும் ‘பண்டிகை’ திரைப்படம்

0

 869 total views,  1 views today

2X1A1266
கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கி இருக்கிறார் . இந்த படத்தின் ‘நெகட்டிவ்  உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’  படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
“கை ஓங்கினால் தான், தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு கோபமான அனாதை இளைஞன் (கிருஷ்ணா), ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவன் தன் காதலிக்காக (ஆனந்தி) நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் எங்களின் ‘பண்டிகை’ படத்தின் கதை. விநியோக துறையில் பிரபலமாக விளங்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் எங்கள் படத்தை உலகமெங்கும் வெளியிடுவது, அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. படம் வெளியாகும் நாளான மார்ச் 9 ஆம் தேதி, எங்கள் அனைவருக்கும் பண்டிகை நாளாக இருக்கும்.” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.
Share.

Comments are closed.