ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, – ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்… ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக்ஷன்ஸ்.
ஆம்! தமிழ்…. தமிழர்… தாயகம்… போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்…. பண்பாட்டு பாசறையாக… வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி களம் – கீழடியில்தான், அதன் தொடக்கம் என்பது பொருத்தம்தானே! ஆம். பிப்ரவரி 2 நாள் மாலை 4 மணிக்கு, இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் உருவாக்கிய ராக… தாளங்கள் ‘ஜல்லிக்கட்டு’ படத்துக்காக ஒலித்துள்ளது. இது மட்டுமல்ல.
உலகப் புகழ் பெற்ற ஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில், இதுவரை இல்லாத நடப்பாக, வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இசை ஒலிக்க உள்ளது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் சந்தோஷ் கோபால் இயக்கத்தில் உருவாகும் “ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017” திரைப்படத்துக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
அஹிம்சை போராட்டத்துக்கு உலக ஆசானாக விளங்கும் இந்தியாவில் இருந்து “இதோ, இன்னொரு பாடம்!” என, கடந்த ஆண்டு ஜனவரியில் அறவழி போராட்டத்தை சென்னை மெரினாவில் தொடங்கி நடத்திய தருணம்தான் இந்த படத்தின் கதைக்களம். தயாரிப்புப் பணியின் இறுதிக் கட்டத்தில் உள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இப்படித்தான். உலகின் குறிப்பிடத்தக்க இடங்களில் வெளியாக உள்ளன. உதாரணமாக, பிப்ரவரி 22 அன்று பெர்லினில்… அடுத்து சிங்கப்பூரில்…. தொடர்ந்து கென்யாவின் புகழ் பெற்ற மசாய் மாராவில்… பின்னர் ஈஃபிள் டவர் முன்… என ஒரு பட்டியல் நீள்கிறது.
நிருபமா தலைமையிலான அஹிம்சா புரொடக் ஷன்ஸ் சார்பில், ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் இணை தயாரிப்பில் – தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, அதை மீட்பதற்கான போராட்டம் போன்றவை – தமிழர்களிடையே ஏற்படுத்திய உணர்வுகளை காட்சிப்படுத்தும் இந்த திரைப்படம் சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் மட்டுமல்ல. ஹாலிவுட்டின் பல நுட்பங்களை, தமிழில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.
மேலும் விவரங்களுக்கு
சந்தோஷ் / +91-9840398958