ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு “மகேந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் இனையும் படம் இது.
மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு. : சாய் ஸ்ரீராம்
இசை. : அச்சு ராஜாமணி
பாடல்கள். : ஏக்நாத் தாணுகார்த்திக்
கலை. : ராமாஞ்சனேயலு
நடனம். : பிரதீப் அந்தோணி சேகர்
சுசித் ரா சந்திரபோஸ்
ஸ்டண்ட். : வெங்கட்
எடிட்டிங். : கே. வெங்கடேஷ்
இயக்கம் – மகேஷ்பாபு
இனை தயாரிப்பு : எஸ் ராஜேஷ் , ராஜஸ்ரீ, மணிகண்டன்
தயாரிப்பு. : என்.சாய்ராம்.
இந்தப்படம் தெலுங்கில் ரா ரா கிருஷ்ணய்யா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது..அதையே மகேந்திரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கின்றார்கள்.
தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க , அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான் இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை. இதை கமர்ஷியல் படமாக உருவாக்கி உள்ளார் இயக்குனர். காதல் காமெடி என பக்கா கமர்ஷியலாக மகேந்திரா உருவாகி உள்ளது. பாகுபலி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரப் பெயரான மகேந்திர பூபதியை தான் மகேந்திராவாக்கி இருக்கிறார்கள்.
பாகுபலியில் எப்படி தீய சக்திகள் அழிய வேண்டும் என்று பிரபாஸின் கதாபாத்திரம் போராடியதோ அது மாதிரி சந்தீப் கிஷன் இதில் போராடுகிறார்.
படம் விரைவில் வெளியாக உள்ளது.