சாமி 2வில் சீயான் விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா.

0

Loading

tamil-actor-actor-simha-gallery03
சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் .

இதைப் பற்றி இயக்குநர் ஹரி கூறியதாவது..

நடிகர் விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்.

சாமி படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி=2வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்.’ என்றார்.

சீயான் விக்ரமும், பாபி சிம்ஹாவும் தேசிய விருதுபெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.

Comments are closed.