விழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் ஏற்பாடுகள் செய்யபடும்.
2. கட்டிடம் கட்ட உடனடி ஆவனமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும்.
3. டப்பிங் சீரியல் தடுப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும்.