சிம்பு பெயரை களங்கப்படுத்தும் முயற்சி

0

 742 total views,  1 views today

சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான  தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருது தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவிவருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர்  என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும்   உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை  காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால்  பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அணைத்து ஊடக நண்பர்களை பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன் ”.
Share.

Comments are closed.