சிலம்பத்தால் ஈர்க்கப்பட்ட விஜய் ஆண்டனி

0

Loading

புதிய புதிய இலக்குகளை மிக மிக ஆர்வத்தோடு கடக்கும் ஒரு  மாலுமி தான் நடிகர் விஜய் ஆண்டனி என்றால் மிகை ஆகாது. ஒரு இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். பல்வேறு அவதாரங்களை எடுத்த விஜய ஆண்டனி, தன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி நடிகராக, எடிட்டராகவும் மாறியிருக்கிறார். எஸ் எஸ் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் திமிர் பிடிச்சவன் படத்தில் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் உபயோகப்படுத்த இருக்கிறார் விஜய் ஆண்டனி. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி  இன்னொரு புதிய அவதாரத்தையும் எடுக்கிறார் விஜய் ஆண்டனி.

பன்முகத் தன்மைகளை கொண்ட விஜய் ஆண்டனி, இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சிலம்பம் பயின்று வருகிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிகளை பற்றி இயக்குனர் கணேஷா கூறும்போது, “எல்லா துறைகளிலும் தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முயற்சிக்கும் விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அர்ப்பணிப்பும், பர்ஃபெக்‌ஷனும் பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதையும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர். இந்த சிறந்த பண்பு தான் அவரின் கேரியரில் இந்த உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது.

மேலும் இந்த படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, அதிலும் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும்” என்றார்.

Share.

Comments are closed.