சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா – நடிகர் சங்கம் அழைப்பு!

0

 137 total views,  1 views today

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வரும் அக்டோபர் 1-ம் தேதி ஞாயிறு காலை 10.30 மணி அளவில் சென்னை அடையாரில் நடைபெறும்  நடிகர் திலகம் ‘செவாலியே’ சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இவ்விழாவில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
-தென்னிந்திய நடிகர் சங்கம்
Share.

Comments are closed.

CLOSE
CLOSE