சுசீந்திரன் சொன்ன சுவையான தீபாவளி வாழ்த்து….

0

Loading

 

எளிய கிராமத்து மனிதனாக சினிமாவில் நுழைந்து தேசீய விருதுபெற்ற படத்தை இயக்கிய சசீந்திரன் இன்று பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல அவர்களையெல்லாம் பிரசாத் லேபுக்குக்கு அழைத்திருந்தார்..
1991ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தைப் பார்க்க சைக்கிளில் சென்று காலில் அடிபட்டதற்கான அடையாளம் இன்றும் தன் காலில் தழும்பாகத் தடித்திருக்கிறது….. என்று ஆரம்பித்த இயக்குநர் சுசீந்திரன் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு தீபாவளியையும் நினைவு கூர்ந்தார்.
தீபாவளி மற்றும் பொங்கலுக்கு தான் சொந்த ஊருக்குப் போகாததன் காரணம், அங்கே எதிர்கொள்ள வேண்டிய கேள்விகள் குறித்தான பயம் என்பதை விளக்கிவிட்டு,தன் முதல் படம் செய்ததும் அம்மா அப்பா அண்ணன் அண்ணிதங்கை என்று குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் புதுத்துணி எடுத்துக் கொடுத்து தீபாவளியை கொண்டாடியதை நினைவு கூர்ந்தார்.
தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னரே தான் மணம் புரிந்ததையும், தன் படவெற்றியையும் தலைதீபாவளியையும் சந்தோஷமாகக் கொண்டாடியதையும் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்….
தான் இயக்கிய நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை இந்த தீபாவளிக்கு திரையிட முயற்சித்ததையும் அது முடியாமல் போனதையும் மென்சோகத்துடன் பகிர்ந்து கொண்டார்.
சமூகப் பிரக்ஞையுள்ள சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் படம் எப்போது வந்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

சுசீந்திரன்…
எவனெவன்
சிறகுகளுக்கு
எவ்வளவு
வலிமை உண்டோ
அவனவன்
அந்தந்த
உயரங்களை
அடைந்தே தீருவான்…..

 

 

நம்மிக்கையுடன் இருங்கள் சசீந்திரன்.

-ராஜா.செந்தில்நாதன்

Share.

Comments are closed.