சுட்ட கதையும் சுடும் உண்மைகளும்

0

Loading

bogan-movie-audio-and-movie-release-dates-latest-kollywood-news
லஷ்மண் இயக்கும் போகன் என்ற படத்தின் கதை தான் எழுதிய அல்வா என்ற கதையின் அப்பட்டமான காப்பி என்றும், அதை தன் அனுமதியில்லாமல் திரைப்படமாக உருவாக்கி வதாகவும் ஆன்டனி தாமஸ் என்பவர் தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.தனது அல்வா கதையை அவர் ஏற்கெனவே அவர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவும் செய்து வைத்திருக்கிறார்.
சங்கத் தலைவர் விக்ரமன் இது குறித்த உண்மை நிலையை விசாரிக்க ஆறு எழுத்தாளர்களைக் கொண்ட புகார் விசாரணைக் குழுவை அமைக்க, அந்தக் குழுவினரும் பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு பஞ்சாயத்து பேச ஏதுவாக களத்தில் இறங்கி கதையைக் கேட்டிருக்கின்றனர்.
இறுதியில் வாதி பிரதிவாதி இருவரின் கதைகளுக்கும் சில ஓற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்து தலைவர் விக்ரமனிடம் அறிக்கை அளித்திருக்கின்றர்.
தன்னுடைய கதைக்கு எழுபத்தைந்து லட்ச்ம் ரூபாய் வேண்டும் என்றும், டைட்டிலில் தன் பெயரைப் போடுவதுடன் மொழி மாற்ற உரிமையையும் தனக்குத் தர வேண்டும் என்று சங்க நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டிரு்க்கிறார் ஆன்டனி தாமஸ்.
டைட்டில் கிரிடிட் மற்றும் மொழி மாற்ற உரிமையைப் பெற்றுத் தருவதாகவும், பணம் பத்து லட்சம் ரூபாய்வரை வாங்கித் தர முயற்சிப்பதாகவும் சங்க நிர்வாகிகள் கூறிீயிருக்கின்றனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வ ந்த போகன் இயக்குநர் லக்ஷ்மண், கையோடு சில ஆங்கிலப்பட டி.வி.டிக்களையும் கொண்டுவந்து சங்கத்தில் கொடுத்து, இந்த டி.வி.டிகளிலிருந்தும், மேலும் சில ஆங்கில டி.வி.டிக்களிலிருந்தும்தான் தான் போகன் படத்துக்ககான கதையை உருவாக்கியதாகவும் தெரிவித்து சங்கத்தின் பொறுப்பாளர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறார்.
இறுதியில் ஒரு ஆப்ரிக்கப் படக்கதையைத்தான் இருவருமே சுட்டு கதை பண்ணியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதுபோல் அடுத்தவர் குழந்தைக்கு அப்பன் உரிமை கொண்டாடும் அநாகரீக சம்பவங்கள் பல அரங்கேறியிருக்கின்றன.
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தின் கதை என்று ஒரு உதவி இயக்குநர் கொதித்தெழுந்து குற்றம் சுமத்த, மிகக் கடுமையாக அதை மறுத்தார் இயக்குநர் விஜய். பின்னர்தான் இருவருமே ஐயம் சாம் என்ற ஆங்கிலப் படத்தை அப்பட்மாக காப்பியடித்திருப்பது தெரிய வந்த்து
இனிமேலாவது இதுபோன்ற பிரச்சனைகள் வராமலிருக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்ததுக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறோம்.
கதையை காகிதத்தில் எழுதி அதை சங்கத்தில் பதிவு செய்வதற்கு பதில், எந்த ஆங்கிலப்படத்திலிருந்து சுடுகிறார்களோ அதன் டி.வி.டி. பிரதி ஒன்றை சங்கத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த டி.வி.டி.மீது அதைக் கொடுத்தவரின் பெயரை எழுதி தேதியைப் போட்டு சங்க நிர்வாகிகளின் கையெழுத்துடன் சீல் செய்து வைத்துவிடவேண்டும். இப்படி செய்யும்போது டி.வி.டியை பதிவு செய்து வைத்தவர் மட்டுமே அதைத் தமிழில் படமாக்க உரிமையுள்ளவர் என்று அறிவித்துவிட்டால் இது போல் பிரச்னைகளே வராது.
மற்றொரு முக்கியமான விஷயம். போகன் இயக்குநர் லக்ஷ்மண் செய்யததைப்போல் நான்கைந்து டி.வி.டிக்களை கொண்டுவந்து இந்த டி.வி.டிக்களிலிருந்தும் வேறு சில ஆங்கிலப்படங்களிலிருந்தும்தான் நான் என் கதையை உருவாக்கியிருக்கிறேன் என்று எந்த உறுப்பினரும் சொல்ல எக்காரணத்தை முன்னிட்டும் சங்கம் அனுமதித்கக் கூடாது.
ஒரு உறுப்பினருக்கு ஒரு டி.வி.டி மட்டுமே அனுமதி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். லக்ஷ்மண் போன்றவர்கள் ஒரு படத்துக்கே ஏழு எட்டு டி.வி.டிகளை எடுத்துக்கொண்டா் மற்றவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.

டெயில் பீஸ் _ மெமண்ட்டோ ஆங்கிலப்படத்தை ஆரத்தழுவி கஜினி என்ற படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கெனவே வெளியான தமிழ்படங்களிலிருந்தே வசனங்களை சுட்டு தனதாக்கிக் கொள்வதில் வல்லவர். கத்தி படத்தில் இட்லியை வைத்து கம்யூனிசத்துக்கு அவர் கொடுத்த அட்டகாசமான விளக்கம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாகேஷ் நாயகனாக நடித்து வெளிவந்த உலகம் இவ்வளவுதான் என்ற படத்தில் இடம் பெற்றது. ஒரு சிறிய வித்தியாசம். நாகேஷ் அந்தப்படத்தில் சப்பாத்தி என்று சொல்லியிருபதை முருகதாஸ் இட்லி என்று மாற்றியிருப்பார்.

Share.

Comments are closed.