லைகா புரோட்க்ஷன்ஸின் பெருமைக்குறிய பிரம்மாண்ட படைப்பு, ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.0’
அதி நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் பர்ஸ்ட் லுக் – மும்பையில் விழா
‘2.0’, உலக திரையுலகமே வியப்போடும் விருவிருப்போடும் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான படம். லைகா புரோட்க்ஷன்ஸின் மிக பிரம்மாண்ட தயாரிப்பு, ஷங்கரின் புத்திசாலிதனத்துடன் கூடிய பிரம்மிப்பூட்டும் இயக்கம், ரஜினியின் ஸ்டைல் மந்திரம், அக்ஷய்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹமான் என பலர் இப்படத்தில் இணைந்ததே இதற்கு காரணம்.
நவம்பர் 20ம் தேதி ‘2.0’ படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட மிகப் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரோட்க்ஷன்ஸ்.
மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோஸில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions)பிரத்யேகமாக நேரடியாக ஒளிபரப்பபட இருக்கிறது. மேலும் லைகாவின் மோபைல் அப் (Andriod& IOS) மூலமாகமும் இந்நிகழ்வை நேரடியாக காணலாம்.
இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், ஏமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறவர் இந்தி திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹர் அவர்கள்.
முதன் முறையாக ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவிருக்கிறது. எப்போதுமே எந்தவொரு விஷயத்தில் புதுமையை விரும்பும் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஷயத்திலேயே தனது புதுமையை தொடங்கிவிருக்கிறார்.