Saturday, December 14

செப்டம்பர் 29ஆம் தேதி சர்வர் சுந்தரம் !

Loading

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக உள்ளது ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும்  வரவேற்பை பெற்றது. தற்பொழுது, ‘சர்வர் சுந்தரம்’ வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  ‘சர்வர்’ கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடை விடா  சிரிப்பு வெள்ளமாக  இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது முக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில், ‘கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு சிரிப்பு படையலாக ‘சர்வர் சுந்தரம்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.