‘சோலோ படத்தின் சோலோ நாயகன் துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்.

0

 708 total views,  1 views today

 
‘சோலோ’ படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற  அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது.பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூடியுள்ளது. நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் தோன்றவுள்ள ‘சோலோ’ படத்தில் நேஹா  சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர்  அவருக்கு  ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை  துல்கரே அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கதாநாயகிகளுடனான  காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. ‘The Refex Group’ சார்பில் ‘Refex Entertainment’ இப்படத்தை ‘Getaway Films’ உடன் சேர்ந்து தயாரித்துள்ளது. ‘சோலோ’ படத்தின் post production பணிகள் மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றது.

 

Share.

Comments are closed.