வேலூர் மாவட்டம், சோளிங்கரில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சோளிங்கர் தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, தலைவர் அவர்கள் முதன் முதலாக வேலூருக்கு வருகை தரும் போது சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், கிராம பஞ்சாயத்துக்களில் நிர்வாகிகள் மூலமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என்றும், வேலூர் மாவட்டத்தில் 7 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்கிற இலக்கோடு, ஒவ்வொரு தொகுதிக்கும் 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இதில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட கிளை மன்ற நிவாகிகள் சுமார் 2500 பேர் பங்கேற்றார்கள், இதில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த சோளிங்கர் என்.இரவி அவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை கவுரவித்து, உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.