299 total views, 1 views today
நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh மூலம் “ஜருகண்டி” என்கிற திரை படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே. ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான் . ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துக் கொண்டு இருந்த இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
“திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர் டி ராஜசேகர் அவர்களுடைய அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது.அதுவே எங்களுக்கு பெருமை” என்றார். இளம் இசை அமைப்பாளர் போபோ சஷி இசை அமைக்க, பிரவீன் கே எல் படத்தொகுப்பில், அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்க அவருடன் ரோபோ ஷங்கர், இளவரசு , காவ்யா ஷா, ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இணைந்து தயாரிப்பவர் Shraddha entertainment ” பத்ரி கஸ்தூரி”.