ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞனின் அகால மரணம் – லாரன்ஸ் கட்டிக் கொடுத்த வீட்டு கிரகப்பிரவேசம்

0

 267 total views,  1 views today


கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் யோகேஸ்வரன்..
சேலத்தை சேர்ந்த ராஜா ,புஷ்பா தம்பதிகளின் மகனான யோகேஷ்வரனின் பெயரில் உள்ள யோகம் அவரது வாழ்க்கையில் இல்லை…
போராட்டத்தில் வீரமான அந்த இளைஞன் ரயில் விபத்தில் அடிபட்டு இறந்து விட துடி துடித்து போனார்கள் பெற்றோர்கள்..
தங்களது கனவெல்லாம் தளர்ந்து விட்ட சோகத்தில் இருந்த யோகேஷ்வரனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன லாரன்ஸ் ,நான் உங்க மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்..

சொன்னதோடு நின்று விடாமல் யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்காக ஏற்பாடு செய்தார்..
அத்துடன் அவர்கள் குடும்பத்தினர் வாழ்வதற்காக ஒரு இடத்தை வாங்கி
அதில் அழகாக இருபத்தந்து லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டி கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்..
யோகேஸ்வரன் விபத்தில் இறந்த நாள் கடந்த பிப்ரவரி 7 ம் தேதி..
இந்த ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டிக் கொடுத்து இந்த வருடம் அதே பிப்ரவரி 7 ம் தேதி அன்று கிரகப்பிரவேசத்தையும் லாரன்சே முன்னின்று நடத்தி வைக்க இருக்கிறார் மகனாக…
நாளை காலை 9 மணிக்கு சேலத்தில் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களை சந்திக்கிறார்..அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்..

Share.

Comments are closed.