ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஜல்லிக்கட்டின் பெருமைகளை உணர்த்தும் பாடல்

0

 904 total views,  1 views today

Jallikattu

ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெருவாரியாக ஒன்றினைந்து தங்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டிற்கு தரும் ஆதரவின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர்.

மக்களுடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆதரவளித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

ஜல்லிக்கட்டு எங்கள் தமிழர் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம், ஆகவே தடையை விளக்குங்கள் என்று உரக்க குரல் கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார், மேலும் தனது ஆதரவை வலுப்படுத்த ஜல்லிகட்டின் மகிமை மற்றும் தமிழருக்கும் ஜல்லிக்கட்டிற்க்குமான சொந்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக கூறும்கொம்பு வைச்ச சிங்கமடாஎனும் பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்பாட்டிற்கு வரிகள் எழுதியுள்ளார்.

ஐடியுன்ஸ், யு டுயுப் உள்ளிட்ட ஆன்லன் தளங்களில் வெளியான இப்பாடல் ஈட்டும் வருமானம் அனைத்தும் உழவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Share.

Comments are closed.