(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)
டிசம்பர் 29 முதல்..
ஜுமாஞ்சி
Joe Johnston-இன் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கிய ஜுமாஞ்சி எனும் திரைப்படம் நினைவிருக்கலாம். Chris Van Allsburg, 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேட காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா Stephen L.Price-இன் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura – A Space Adventure’ வெளியானது. 1995 படத்தில் நடித்த, மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ், Alam Parrish என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். JUMANJI – Welcome to the Jungle என்கிற இப்புதிய பதிப்பு, 2014 ஆம் ஆண்டு இறந்து விட்ட ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. Smolder Bravestone என்கிற ஒரு கதாபாத்திரத்தில் Dwayne Johnson நடித்துள்ள இப்படத்தில், Spencer Miller-ஆக Alex Wolff, Shelly Oberon ஆக Jack Black, Bethany White ஆக Madison Iseman மற்றும் Franklin Finbar வேடத்தில் Kevin Hart ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் Jumanji என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர்!
அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்கள் அடையப் பெறும் படிப்பினைகளுமே படத்தின் சாரம்!
இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய JUMANJI படத்தில் ஒரு விளையாட்டும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அடிப்படை. அவ்விளையாட்டு, இதில் புதியதொரு அனுபவமாக ஒரு வீடியோ கேமாக (Video Game) சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும்! அதுவே விளையாட்டின் விதிமுறை!
Henry Jackman இசையமைத்துள்ளார். Gyula Pados ஒளிப்பதிவு செய்துள்ளார். Sony Pictures-இன் உருவாக்கம் இப்படம்.