ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி

0

 896 total views,  1 views today

IMG_9953
ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு  கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம்  கொண்டவர், கார் பந்தய வீரரும்,  நடிகருமான  ஜெய். இவர் தற்போது அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.
சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை,   ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பலூன் படப்பிடிப்பு தளத்தில்,  ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெயின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். அவருடைய வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வந்தார் இயக்குநர் சினிஷ். படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
 
Share.

Comments are closed.