டூப் இல்லாமல் சந்தானம் போட்ட ஸ்டன்ட்

0

 494 total views,  3 views today

            santhanam

 வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.                                                                                                                                     அதை தொடர்ந்து  சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோராதஸ்தர்  நடிக்கிறார்.மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                                            

ஒளிப்பதிவு     –     கோபிநாத் / இசை    –    ஜிப்ரான் / கலை  –    வனராஜ்                                 

ஸ்டன்ட்      –        சில்வாஎடிட்டிங்     –    ராமாராவ்

தயாரிப்பு நிர்வாகம்  –  மகேஷ்                                    

தயாரிப்பு மேற்பார்வை  – பாலகோபி

தயாரிப்பு   –        கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்

கதை, திரைக்கதை, வசனம்  –  ஞானகிரி  – Correction 

இயக்கம்  –   கே.எஸ்.மணிகண்டன்.   

ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. வில்லனாக நடிக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான ஸ்டன்ட் காட்சி படமாக்கப் பட்டது.

டூப் இல்லாமல் மேல் இருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் சந்தானம் ஸ்டன்ட் காட்சியில் நடித்து யூனிட் ஆட்களின் கைத் தட்டலை பெற்றார்.  சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட்  வாங்கியதுடன், முறைப் படியான ஸ்டன்ட் விஷயங்களைக் கற்றதும் இதற்கு பக்க பலமாக உதவுகிறது என்று யூனிட் ஆட்கள் கூறுகிறார்கள். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE