நமது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 10.12.2017 ஞாயிறு அன்று காலை 1030 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பொதுக்குழு கூட்டம் குறித்து சங்க விதியின்படி 21 தினங்களுக்கு முன்பாகவே நிரந்தர உறுப்பினர்கள் தபால் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அத்துடன் நமது சங்க விதியில் சில மாற்றங்கள் செய்து பழைய மற்றும் மாற்றப்பட்ட புதிய விதி மாற்றங்களையும் 1211 உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளோம் ஆனால் 07.12.2017 அன்று நமது சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தினை அணுகி பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என தடை உத்தரவு கோரியுள்ளார்கள். ஆனால் மாண்புமிகு நீதியரசர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்படி மனுவை நிராகரித்து விட்டார். அத்துடன் மேற்படி பொதுக்குழுவில் கூட்ட நடவடிக்கையை பார்வையிட கண்காணிப்பாளர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் மாண்புமிகு திரு.ராமநாதன் அவர்களை நியமித்து உள்ளார்கள்.
நாங்கள் தான் பொதுக்குழு நடத்த ஆவண ஏற்பாடுகளை செய்துள்ளோம். மாண்பு மிகு நீதியரசர் திரு.கார்த்திகேயன் அவர்களின் ஆணையை ஏற்று நீதியரசர் மாண்புமிகு திரு.ராமநாதன் அவர்களின் பார்வையில் பொதுக்குழுவை நடத்த இருக்கிறோம்.
எங்களுக்கு பொதுக்குழுவை நடத்துவதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்