சிவாஜிகணேசன் நடித்த அந்தமான் காதலி, ரஜினி நடித்த பொல்லாதவன், ஜெயலலிதா – முத்துராமன் நடித்த சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்த முக்தா சீனிவாசன் ( வயது 89 ) உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இரவு காலமானார். மனைவி பெயர் பிரேமா, அவருக்கு முக்தா சுந்தர், முக்தா ரவி என்ற மகன்களும், மாயா என்ற மகளும் உள்ளனர்.
ஏறக்குறைய 70 வருடங்களாக தமிழ் திரையுலகில் பிரபலாமாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது.
அவரது உடல் தி.நகரில் உள்ள வைத்திய ராமன் தெருவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கா வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு கண்ண்ம்மா பேட்டை மயானத்தில் நடக்கிறது..